728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Monday, April 24, 2017

    கப்பலில் பாரிய வெடிப்பு சம்பவம் : ஒருவர் பலி பலர் காயம்

    ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த மீன்பிடி கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    இன்று மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், 5 மீனவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்த ஐந்து பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


    மீன்பிடி கப்பலில் இருந்த எரிவாயு சிலிண்டர் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாகவே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கப்பலில் பாரிய வெடிப்பு சம்பவம் : ஒருவர் பலி பலர் காயம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top