728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, April 20, 2017

    ஒரே நேரத்தில் மூன்றா- திரிஷா பார்த்த வேலை


    ‘கொடி’ படத்திற்கு பிறகு நடிகை த்ரிஷா கைவசம் ‘மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 96, 1818’ ஆகிய படங்கள் உள்ளது. 

    இதில் ரித்துன் சாகரின் ‘1818’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரேம் குமாரின் ‘96’ படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ‘

    96’ படத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

    தற்போது, ‘மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2’-வில் தான் இடம்பெறும் அனைத்து காட்சிகளிலும் வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டதாக த்ரிஷா ட்விட்டியுள்ளார். 

    ஏற்கெனவே வெளியான இந்த மூன்று படங்களின் போஸ்டர்களும் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்தது. ஹாரர் ஜேனரில் உருவாகிவரும் ஆர்.மாதேஷின் ‘மோகினி’, த்ரில்லராக ரெடியாகிவரும் சுந்தர் பாலுவின் ‘கர்ஜனை’ படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரமாம்.


    'சலீம்' புகழ் நிர்மல் குமாரின் ‘சதுரங்க வேட்டை 2’-வில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடி வருகிறார். இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது.

    ‘சதுரங்க வேட்டை’யை இயக்கிய வினோத் இதற்கு கதை-திரைக்கதை-வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரே நேரத்தில் மூன்றா- திரிஷா பார்த்த வேலை Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top