728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, April 20, 2017

    விளையாட்டில் கில்லியான குட்டி டோனி: அசத்தல் ஆட்டம்


    இந்திய அணிக்கு மூன்று வித போட்டிகளில் தலைவராக இருந்தவர் டோனி.

    அதுமட்டுமின்றி இவர் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டியில் உலகக்கிண்ணம், டி20 உலகக்கிண்ணம் மற்றும் சாம்பியன் டிராபி என மூன்று வித கிண்ணங்களை வென்று அசத்தியுள்ளது.

    இந்நிலையில் டோனி திடீரென்று சில மாதங்களுக்கு முன்னர் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

    அதைத் தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடரில் புனே அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

    டி20 போட்டியில் டோனியின் செயல்பாடு சிறப்பாக இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்திருந்தார். அது பெரும் ரசிகர்களுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்தவரான சாம்பில்லிங்ஸ் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பாண்ட் குறித்து கூறியுள்ளார்.

    அவர் கூறுகையில், ரிஷப் பாண்ட்டின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. கீப்பங் மற்றும் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்படுகிறார்.

    குறைந்த அளவே போட்டிகள் விளையாடி இருந்தாலும், அவரின் ஆட்டம் வியப்பாக இருக்கிறது.

    நிச்சயமாக கூறலாம், டோனி இடத்தை நிரப்பும் திறமை பாண்ட்டிடம் உள்ளது, இருந்த போதிலும் டோனிக்கு நிகர் டோனி தான் என்றும் கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விளையாட்டில் கில்லியான குட்டி டோனி: அசத்தல் ஆட்டம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top