728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, April 20, 2017

    CSK எப்ப வரும்..டோனியுடன் விளையாட ஆவலாக காத்திருக்கும் ரெய்னா: உருக்கம்

    டோனியுடன் இணைந்து மீண்டும் எப்போது மஞ்சள் சட்டை அணிந்து விளையாடுவோம் என்பதை எதிர்பார்த்து காத்திருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் ஆண்டு தோறும் நடக்கும் ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு பத்தாவது ஐபிஎல் தொடராக நடைபெற்று வருகிறது.

    இத்தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே புனே அணியின் தலைவர் பதவியில் இருந்து டோனி அதிரடியாக நீக்கப்பட்டார்.

    அதன் பின் புனே அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயின்காவின் சகோதரர், ஹர்ஸ் கோயின்கா டுவிட்டரில் டோனியின் விளையாட்டு குறித்து மறைமுகமாக சாடினார்.

    இந்நிலையில் டோனியின் செயல்பாடும் இத்தொடரில் தொடர்ந்து மோசமாகவே உள்ளது. அதனால் அவருக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே உள்ளது.

    இவை அனைத்திற்கும் விடைகொடுக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா டோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

    அவர் கூறுகையில், டோனியை பற்றிய விமர்சனங்கள் தனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர் இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் கடுமையாக உழைத்துள்ளார்.

    இதை நான் சொல்லி தான் அனைவரும் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை.

    அவருக்கு மரியாதை அளிப்பது நமது கடமையாகும். ஒரு வீரர் தனது சோதனை காலத்தில் தனக்கு ஆதரவான வார்த்தைகளை கேட்க விரும்புவார்.

    ஆனால் டோனி தனக்கு எதிராக வரும் கடுமையான விமர்சனங்களை எப்படி தான் பொறுத்துக்கொள்கிறார் என தெரியவில்லை.

    அவருடன் மீண்டும் எப்போது மஞ்சள் சட்டை போட்டு விளையாடுவோம் என்பதில் ஆர்வமாக உள்ளதாக ரெய்னா கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: CSK எப்ப வரும்..டோனியுடன் விளையாட ஆவலாக காத்திருக்கும் ரெய்னா: உருக்கம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top