728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, March 2, 2018

    இன்றைய ராசிபலன் - 03.03.2018


    03-03-2018, மாசி 19, சனிக்கிழமை, துதியை திதி பின்இரவு 02.18 வரை பின்பு தேய்பிறை திரிதியை. உத்திரம் நட்சத்திரம் இரவு 08.55 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

    இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
    meshamமேஷம்
    இன்று நீங்கள் மன உறுதியுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
    reshabamரிஷபம்
    இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.
    3மிதுனம்
    இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் அனைத்து தேவைகளும் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
    kadagamகடகம்
    இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
    5சிம்மம்
    இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
    kannirasiகன்னி
    இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள்.
    thulamதுலாம்
    இன்று குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் செலவுகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
    viruchagamவிருச்சிகம்
    இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.
    danushதனுசு
    இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.
    magaramமகரம்
    இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.
    kumbamகும்பம்
    இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
    meenamமீனம்
    இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்றைய ராசிபலன் - 03.03.2018 Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top