728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, March 2, 2018

    80 சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்திய சுவிஸ் பிரஜைக்கு 16 ஆண்டுகள் சிறை


    ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தாய்லாந்தில் 80 க்கும் மேற்பட்ட குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு சுவிஸ் மனிதரிற்கு அபராதம் விதிக்கப்பட்டு சுவிஸ் நீதிமன்றத்தினால் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்றம் அவரை மனித கடத்தல் மற்றும் சிறுவர் பாலியல் நடவடிக்கைகளுக்காக குற்றம் சாட்டியது. பாலியல் படங்களை எடுக்கவும், விபச்சாரத்திற்காகவும் அவர் சிறுவர்களை பயன்படுத்தியது தெரிய வந்தது.

    72 வயதான இந்த மனிதர், குழந்தைகளின் மனித நேயத்தையும், கண்ணியத்தையும் நிராகரித்ததாக, விசாரணையின் போது, வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். மேலும் அவர்களில் சிலர் துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட போது 10 வயது மட்டுமே, என்பது அதிக வருத்தத்திற்கு உரியதாகும்.

    1980 மற்றும் 1991 களில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக இவர் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறிய போதும், வலைஸ் பொலிஸாரினால் தாய்லாந்தில் இருப்பது கண்டறியப்பட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 80 சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்திய சுவிஸ் பிரஜைக்கு 16 ஆண்டுகள் சிறை Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top