ஐக்கிய தேசிய கட்சியை தேசிய பட்டியல் மூலம் வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அழிவு பாதைக்கு இட்டு செல்வதாக அக்கட்சியின் உப தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பு மோதரை பகுதியில் இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
உண்மையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு யார் உழைத்தனர் என்பதை கட்சியில் உள்ள சிலர் மறந்துவிட்டனர்.
ஆனால் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களே கட்சிக்கு முதுகெலும்பாக இருந்ததை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியில் தீவிரமான மாற்றத்திற்காக பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவித்த அவர் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என கூறினார்.
ஆனால், ஐக்கிய தேசிய கட்சியில் தேசிய பட்டியல் மூலம் வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.
மேலும், இவ்வாறான சிலரிடம் இருந்து கட்சியின் ஆதரவாளர்கள் பாதுகாக்க வேண்டும் என கூறிய ரவி கருணாநாயக்க அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் எனவும் கூறினார்.

0 comments:
Post a Comment