728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, March 2, 2018

    கனடாவின் பல பகுதிகள் சீரற்ற காலநிலையால் பாதிப்பு!


    கனடாவின் பல பகுதிகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

    ரொரன்ரோ, கலிடோன், மிசிசாகா, பிரம்டன், பிக்கறிங், ஒஷாவா, டுர்ஹம் பிராந்தியத்தின் தென் பகுதி, வோன், றிச்மண்ட்ஹில் மற்றும் மார்க்கம் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் பிறப்பித்துள்ள அந்த வானிலை எச்சரிக்கையில், குறித்த இந்த இடங்களில் இன்று இரவு பனியுடன் கலந்து மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐந்திலிருந்து பத்து சென்ரிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு நாளை காலையில் பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    வேகமாக வீசகூடிய பனிக்காற்றின் விளைவாக பார்வைப் புலம் பாதிக்கப்படும் எனவும் சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரித்துள்ளது

    இந்த நிலை தீவிரம் தொடர்ந்து நிலவும் எனவும், போக்குவரத்துகளை மேற்கொள்ளும் போது சிரமங்கள் ஏற்படக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனினும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் சூரிய ஒளியுடன் கூடிய வானிலை நிலவும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கனடாவின் பல பகுதிகள் சீரற்ற காலநிலையால் பாதிப்பு! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top