728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, March 2, 2018

    கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்! : விபரம் வெளியானது!!! Tamil Sports News


    மே.தீவுகளில் நடைபெறவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் இருபதுக்கு-20 போட்டித் தொடருக்கான வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் இலங்கை அணியைச் சேர்ந்த நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தசுன் சானக ஆகிய இரண்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

    குறித்த இருவரும் கரீபியன் பிரீமியர் லீக் அணியான சென்.லூசியா அணிக்காக வாங்கப்பட்டுள்ளனர்.

    கடந்த வருடம் இந்த போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த குமார் சங்கக்கார மற்றும் லசித் மாலிங்க ஆகியோரின் பெயர்கள் இம்முறை குறித்த பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை.

    எவ்வாறாயினும் கரீபியன் பிரீமியர் லீக் நடைபெறவுள்ள காலப்பகுதியில், இலங்கையில் லங்கன் பிரீமியர் லீக் நடைபெறவுள்ளதால் குறித்த வீரர்கள் மே.தீவுகளுக்கு செல்வதற்கான சாதகத் தன்மை இல்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்! : விபரம் வெளியானது!!! Tamil Sports News Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top