லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.504 விமானம் நேற்றிரவு ஜேர்மனியின் பிரேங்க்பேர்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாவே விமானம் ஜேர்மனியில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் பிரேங்க்பேர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் போது, இரவில் விமான நிலையம் மூடும் நேரம் என்பதால் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் வரை விமானம், அந்த விமான நிலையத்திலேயே தரித்திருக்க நேரிட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே கொழும்பு - சென்னை மற்றும் கொழும்பு - டெல்லிக்கு இடையிலான விமான சேவைகள் இன்று வழமை போல் இடம்பெறும் எனவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

0 comments:
Post a Comment