728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, March 2, 2018

    14 வயது மாணவியின் சடலம் மீட்பு: கனடா கியூபெக்கில் பரபரப்பு: Cnada | Tamil News


    கியூபெக்கின் , லவெல் பகுதியில் உள்ள உயர் நிலைப் பாடசாலையின் ஒன்றின் பின்புறத்திலிருந்து 14 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    கடந்த திங்கட்கிழமை பாடசாலை மதிய உணவு இடைவேளையின் போது வெளியே சென்ற நிலையில், அவர் மீண்டும் பிற்பகல் வகுப்புகளுக்கு திரும்பவில்லை என்பதுடன், வீட்டுக்கும் சென்றடையாததை அடுத்து தேடுதல்கள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

    இவ்வாறான நிலையில் நேற்று வியாழக்கிழமை அவர் பாடசாலைக்கு பின்புறமாக உள்ள ஒரு நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    இந்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ள போதிலும், அவரின் மரணம் எவ்வாறு நேர்ந்தது என்பது குறித்த விபரங்கள் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.

    குறித்த அந்த 14 வயது மாணவி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பாடசாலை அருகே தற்காலிய நடவடிக்கை பணியகம் ஒன்றினை அமைத்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    இதேவேளை குறித்த அந்த சிறுமி இவ்வாறு பாடசாலையில் இருந்து வெளியே சென்றதாகவோ, காணாமல் போனதாகவோ சம்பவங்கள் எவையும் இதற்கு முன்னர் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 14 வயது மாணவியின் சடலம் மீட்பு: கனடா கியூபெக்கில் பரபரப்பு: Cnada | Tamil News Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top