728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, March 1, 2018

    ஐந்தாண்டு விபச்சார போராட்டத்தில் வெற்றி


    இத்தாலிய மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் உள்ள மாகடினோவின் தொழில்துறை மாவட்டத்தில் விபச்சார விடுதியை உருவாக்கும் வழக்கில் ஒரு நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. விபச்சாரம் ஒரு வர்த்தக நடவடிக்கை அல்ல என்று நீதிமன்றத்தை, அந்த நகர அதிகாரிகளால் நம்ப வைக்க முடியவில்லை.

    கொப்லாடைம் என்றொரு நிறுவனம், மாகடினோவில் விபச்சார விடுதியை உருவாக்க, 2013ல் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டது. தொழில் நுட்ப மற்றும் வர்த்தக விதிமுறைகளுக்கு, விபச்சாரம் எதிரானது என அந்நகர அதிகாரிகள் இந்த நிர்மாணிப்பிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த முரண்பாடு முதன்முதலில் டைசினோ காண்டோனல் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்பட்டது. பின்னர் இந்த வழக்கு நிர்வாக நீதிமன்றத்திற்கு கையளிக்கப்பட்டது.

    மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் பொதுச் சட்டத்தின் இரண்டாம் நீதிமன்றம், விபச்சாரம் வணிக ரீதியிலும் சேவை அம்சங்களிலும் உள்ளடங்கும் என முடிவு செய்தது, மேலும் தொழில்துறை மண்டலத்தின் விதிமுறைகளுக்கும் இது இசைவானது என தெரிவித்தது.

    ஏனைய வணிகத்தை போலவே விபச்சாரமும் சட்டரீதியானது, வரியும் வசூலிக்கப்படுகிறது. எனினும் சில நகரங்களில் சொந்த குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐந்தாண்டு விபச்சார போராட்டத்தில் வெற்றி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top