வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த கூட்டணி 'வடசென்னை திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.
வடசென்னை திரைப்படம் மூன்று பாகங்களாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சற்றுமுன் இதுகுறித்து தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
மூன்று வருட கடுமையான உழைப்பிற்கு பின் ... வட சென்னை முதல் விளம்பர அறிக்கை .. வரும் வியாழன் 8 ஆம் தேதியன்று. என்று தனுஷ் அந்த டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. மேலும் இந்த படம் வரும் ரம்ஜான் திருநாளையொட்டி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

0 comments:
Post a Comment