அஜித் ரசிகர் மன்றமே இல்லாமல் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அவர் நடித்த படம் வந்தாலே ரசிகர்களுக்கு திருவிழா தான். காலமாற்றத்திற்கேற்றார் போல சமூக வலைதள சாதனை கொண்டாட்டங்கள் பெருகிவிட்டது.
வரும் மே மாதம் 1 ம் தேதி அஜித்தின் பிறந்த நாள் வர இருக்கிறது. அதற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இப்போதே கொண்டாட்டங்களுக்கான பிளான்கள் துவங்கியுள்ளது.
சென்னையில் கோயம்பேடு பகுதியில் உள்ள முக்கிய திரையரங்கில் அஜித்தின் பிறந்த நாள் ஸ்பெஷல் ஒரு படத்தை மீண்டும் வெளியிடயிருக்கிறார்கள். ஆனால் என்ன படம் என்பது சர்ப்பிரைஸ்.
அதே போல ட்விட்டரில் சில ரசிகர்கள் #2MonthsToஅஜித்অজিতఅజిత్BDay என ஒரு டேக்கை உருவாக்கி ட்வீட் செய்து வருகிறார்கள். பிறந்தநாளுக்கு இன்னும் இரு மாதங்கள் இருப்பதால் அதை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

0 comments:
Post a Comment