728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, March 1, 2018

    முதலிரவுக்கு மறுத்த மனைவி – கணவனின் விபரீத முடிவு


    தமிழகம் – நாமக்கல் பிராந்தியத்தில் மனைவி முதலிரவுக்கு மறுத்ததால் விரக்தியடைந்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

    கூலி தொழிலாளியான மணி என்பவர் சுகன்யா என்ற பெண்ணை பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் முடித்தார்.

    ஆனால், முதலிரவில் மணப்பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக புதுமாப்பிள்ளை வீட்டை விட்டு வெளியேறினார்.

    இரண்டு நாட்கள் கழித்து மணியின் சடலம் மட்டுமே கிடைத்துள்ளது.

    இதுகுறித்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது மணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

    இதனிடையே, சுகன்யாவிற்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததாகவும், மணியின் மேல் இருந்த பயத்தினாலும் இவர் முதலிரவுக்கு அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த மணி வீட்டை விட்டு வெளியே சென்று தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முதலிரவுக்கு மறுத்த மனைவி – கணவனின் விபரீத முடிவு Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top