728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, March 3, 2018

    அனிருத் மேல் கோபம் குறையாத தனுஷ்


    இன்றைக்கு என்னதான் கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைத்தாலும் ‘3’ என்ற படத்தில் அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதோடு இல்லாமல் தொடர்ந்து தனது படங்களில் அனிருத்திற்கு வாய்ப்பு கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வளர்த்து விட்டவர் தனுஷ். 

    சகவாசம் சரியில்லாமல் சில சிக்கல்களில் அனிருத் மாட்டிக் கொண்டபோதும் கூட அனிருத்தை விட்டுக் கொடுக்கவில்லை அவர். அந்தளவிற்கு அனிருத் மேல் தனுஷிற்கு பாசம் இருந்தது.

    ஆனால் சிம்பு, சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் என தனது எதிரி முகாம்களிடம் அனிருத் நட்புப் பாராட்டியதால் காயம்பட்ட தனுஷ் அனிருத்தை விலக்கி வைத்தார். 

    ஷான் ரோல்டன், சந்தோஷ் நாராயணன், யுவன் ஷங்கர் ராஜா என்று தனது ஜாகையை மாற்றிக் கொண்டார்.

    இந்நிலையில் ரஜினியின் ‘காலா’ டீசரை தனுஷ் தனது டிவிட்டரில் வெளியிட்டதை ரீடிவிட் செய்த அனிருத் தனுஷை வாழ்த்தினார் அனிருத். 

    ஆனால் கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் அனிருத் கமிட் ஆனதையொட்டி ஒரு வாழ்த்து கூட தனுஷ் சொல்லவில்லை.

    இதனால் தனுஷ், அனிருத் இருவரின் ரசிகர்களுமே சங்கடத்தில் உள்ளார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அனிருத் மேல் கோபம் குறையாத தனுஷ் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top