728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, April 7, 2017

    நீர்கொழும்பில் கொடடூர வெடிப்பு சம்பவம் : 19 வயது இளைஞன் உட்பட இருவர் பலி


    நீர்க்கொழும்பு பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹித்தகொள்ள பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் இந்த அனர்த்தமானது இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இந்த விபத்தில், தொழிற்சாலையில் பணியாற்றிய 19 வயது இளைஞர் மற்றும் 35 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    எனினும் தீ சம்பவத்திற்கான காரணங்கள் தெரியவராத நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், குறித்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நீர்கொழும்பில் கொடடூர வெடிப்பு சம்பவம் : 19 வயது இளைஞன் உட்பட இருவர் பலி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top