728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, April 8, 2017

    அமெரிக்காவில் முகமூடி கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக் கொலை


    அமெரிக்காவில் முகமூடி கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் மாநிலம் ஹோசியர்புர் பகுதியைச் சேர்ந்த விக்ரம் ஜார்யால்(26) அமெரிக்காவிற்கு வேலைக்கு சென்றார்.

    வாஷிங்டன் யாஹிமாவில் பெட்ரோல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெளியே சென்று கொண்டிருந்த போது, அவரிடம் முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளனர். 

    அவரிடம் இருந்து யாவற்றையும் பறித்துக் கொண்டனர். பின்னர் போகும் போது, அவரை துப்பாக்கியால் சுட்டனர். படுகாயமடைந்த அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்க்காக அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜார்யால் உயிரிழந்தார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இந்த சம்பவம் குறித்து ஜார்யாலின் சகோதரர், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவின் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். 

    தன் சகோதரர் உடலை இந்தியா கொண்டுவர உதவி புரியுமாறு வலியுறுத்தியுள்ளார். 

    இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள சுஷ்மா, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்காவில் முகமூடி கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக் கொலை Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top