728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, April 12, 2017

    ஜனாதிபதிக்கு இத்தனை மில்லியனில் காரா ? மஹிந்தவை மிஞ்சும் மைத்திரி ?


    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்காக கொள்வனவு செய்யப்பட்ட காரின் விலை குறித்து வெளியான தகவல்கள் வதந்தி என்று நிதி அமைச்சர் ரவி கருணா நாயக்க தெரிவித்துள்ளார்.

    நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பில் அங்கு கருத்துரைத்த அவர்,

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்காக கொள்வனவு செய்யப்பட்ட காரின் பெறுமதி 58 மில்லியன் ரூபாவாகும். ஆனால் 600 மில்லியன் ரூபா செலவில் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஒரு வதந்தியாகும்.

    ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு தேவையான வாகனம் வேண்டும் என அவரது பாதுகாப்புப் பிரிவு கேட்கும் சந்தர்ப்பத்தில் அதனைப் பெற்றுக் கொடுப்பதில் பிரச்சினை இல்லை.

    ஆனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செலவு செய்ததில் 2 அல்லது 3 வீதத்தையே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் செய்து வருகின்றனர் என்றும் ரவி கருணா நாயக்க தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதிக்கு இத்தனை மில்லியனில் காரா ? மஹிந்தவை மிஞ்சும் மைத்திரி ? Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top