728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, April 11, 2017

    இரண்டு பெண்களுடன் தவறான உறவை பேணி வந்த காவற்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி


    கள்ளக் காதலியால் காவற்துறை அதிகாரி ஒருவரின் ஆண் குறி வெட்டப்பட்டுள்ள செய்தி மின்னேரியாவில் இடம்பெற்றுள்ளது.

    குறித்த காவற்துறை அதிகாரி மின்னேரியா காவற்துறை நிலையத்தில் சேவையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர் அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

    குறித்த நபர் நீண்ட காலமாக பெண்ணொருவருடன் இரகசிய தொடர்பை பேணி வந்துள்ளார்.

    பின்னர் இந்த பெண்ணுக்கும் தெரியாமல் மேலும் ஒரு பெண்ணுடனும் இரகசிய தொடர்பை பேணி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

    இதனை அறிந்த மற்றைய பெண் குறித்த நபரின் ஆண் குறியை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பெண் ஹிங்குரகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

    இந்த விபரீதத்திற்கு முகம் கொடுத்த அந்த அதிகாரி, ஹிங்குரகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கவலைக்கிடமான நிலையில் பொலன்னறுவை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    சம்பவம் தொடர்பில் ஹிங்ராகொட காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இரண்டு பெண்களுடன் தவறான உறவை பேணி வந்த காவற்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top