728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, April 12, 2017

    கனடாவில் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளப்படும் கொடுமை


    கனடாவில் பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை கைது செய்துள்ள பொலிசார் பாதிக்கப்பட்ட பெண்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

    கனடாவின் தென்மேற்கு ஒன்றாறியோ மாகாணத்தில் பொலிசார் கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களை பற்றி விசாரணையில் ஈடுபட்டு வந்தார்கள்.

    தற்போது பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுசம்மந்தமாக இதுவரை 78 பேரை கைது செய்துள்ளோம்.

    15லிருந்து 55 வயதுடைய பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களில் 18 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளோம் என கூறியுள்ளனர்.

    மேலும் ஆள் கடத்தல், போதை மருத்து கடத்தல் வழக்கு போன்ற வழக்குகளும் போடப்பட்டுள்ளன.

    பலவிதமான போதை மருந்துகள், பணம், ஆயுதங்கள் ஆகியவைகளும் சோதனையின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கனடாவில் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளப்படும் கொடுமை Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top