728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, April 8, 2017

    மல்லையாவின் பங்களாவை வாங்கினார் சச்சின்..!


    இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனில் இருக்கிறார்.

    தலைமறைவான குற்றவாளியாக மல்லையாவை அறிவித்துள்ள இந்திய அரசு, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசிடம் கேட்டுள்ளது.

    இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியில், மல்லையா வாங்கிய கடனிற்காக, கோவாவில் உள்ள அவரது கிங்ஃபிஷர் சொகுசு பங்களாவை விற்க எஸ்பிஐ வங்கி முயற்சித்தது.

    ஆனால் சரியான விலை கிடைக்காததால் பங்களா விற்பனை ஆகாமல் இருந்தது. இந்நிலையில், மல்லையாவின் பங்களாவை நடிகரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி 73 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்புக்கொண்டுள்ளார்.


    இந்த தகவலை பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா உறுதி செய்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மல்லையாவின் பங்களாவை வாங்கினார் சச்சின்..! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top