728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, April 11, 2017

    பெற்றதாயை சுடுதண்ணி ஊற்றி கொடுமை செய்த மகள் தந்தைக்கு மகன் செய்த காரியம் பிள்ளைகளால் நேர்ந்த அவலம்


    73 வயதுடைய தாய் மற்றும் தந்தையை கொடுமைப்படுத்தி வீட்டில் அறையொன்றில் பூட்டி வைத்திருந்த மகள் மற்றும் மகன் இருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    குறித்த சமபவமானது கம்பஹா, கொட்டலாந்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    இதன் போது, பட்டதாரியான குறித்த மகள் 73 வயதான தாயை சுடுநீர் ஊற்றி சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளார்.

    இது தொடரில் தங்களுக்கு கிடைத்த தகவலுக்கமைவாக வீட்டுக்கு பொலிஸார் சென்ற போது பெண்ணின் சகோதரன் பொலிஸாரை அங்கிருந்து வெளியே செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் இருவரையும் கைது செய்த பொலிஸார் வீட்டினுள் சென்று விசாரணைகளை மேற்கொள்ளும் போது, பெண்ணின் சகோதரர் அறை ஒன்றினுள் தந்தையை பணயக்கைதியாக வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

    இதில் பாதிக்கப்பட்ட தாய் வத்துபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    மேலும்,இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சகோதரன் மற்றும் சகோதரி இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது

    நீதிமன்றம் குறித்த இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பெற்றதாயை சுடுதண்ணி ஊற்றி கொடுமை செய்த மகள் தந்தைக்கு மகன் செய்த காரியம் பிள்ளைகளால் நேர்ந்த அவலம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top