728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Monday, April 10, 2017

    டெங்கு காச்சல் காரணமாக பறிபோன 8 வயது சிறுமியின் உயிர்..! சோகத்தில் உறவுகள்


    தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி ஒருத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதியில் ஆறு நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிர் இழந்த பரிதாக சம்பவம் இன்று மாலை இடம் பெற்றுள்ளது.

    வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதியில் வசிக்கும் கலந்தர் பாவா பாத்திமா ஷிபா(08) காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந் நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிர் இழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இச் சிறுமி டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டெங்கு காச்சல் காரணமாக பறிபோன 8 வயது சிறுமியின் உயிர்..! சோகத்தில் உறவுகள் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top