728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, April 11, 2017

    சிக்ஸர் மழை பொழிந்த டிவில்லியர்ஸ்: மைதானத்தை விட்டு வெளியேறிய பந்துகள்


    நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், டிவில்லியர்ஸ் சிக்ஸர் மழை பொழிந்து பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களை திணறிடித்தார்.

    இந்தூரில் நேற்றைய நடந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

    இப்போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் காயங்களுக்கு பின்னர் பெங்களூரு அணிக்கு திரும்பிய டிவில்லியர்ஸ் நேற்றைய போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று வானவேடிக்கை நிகழ்த்தினார்.



    ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 15 ஓவரில் 71 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

    அதன் பின்னர் தனது சுயரூபத்தை காட்டிய டிவில்லியர்ஸ், மைதானத்தில் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களின், பந்துகளை மைதானத்தை விட்டு வெளியேற்றிய படியே இருந்தார்.

    இதனால் பெங்களூரு அணி கடைசி 5 ஓவரில் 77 ஓட்டங்கள் குவித்தது. டிவிலியர்ஸ் அடித்த பல சிக்சர்கள் மைதானத்தை விட்டே வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிக்ஸர் மழை பொழிந்த டிவில்லியர்ஸ்: மைதானத்தை விட்டு வெளியேறிய பந்துகள் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top