728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, April 11, 2017

    கல்யாணத்திற்கு முன்பே கருக்கலைப்பு :சரவணன் மீனாட்சி நடிகை நந்தினி பற்றிய திடுக்கிடும் தகவல்!



    சில தினங்களுக்கு முன் சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை செய்துகொண்டார்.

    முன்னதாக அவர் அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தில் எனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தை தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார்.இதனை அடுத்து போலிசாரிடம் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கார்த்திகேயனின் தற்கொலைக்கு நந்தினி தான் காரணம் என்று கார்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதற்க்கு மறுப்பு தெரிவித்து வந்த நந்தினி கார்த்திக் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார், அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். மேலும் கார்த்தி பல லட்சம் கடன் வாங்கி பல பேரை ஏமாற்றியுள்ளார் என்று கூறியிருந்தார்.

    இதுகுறித்து கார்த்திக்கின் தாயார் கூறுகையில்,என் மகனை நந்தினி காதலித்த போது அவர் ஒரு நடிகை என்று எங்களுக்கு தெரியாது என்றும் திருமணத்திற்கு முன்பே எங்கள் வீட்டில் நந்தினி தங்கி வந்தாள் என்று கூறியுள்ளார்.

    ஒருமுறை தனக்கு அபார்ஷன் ஏற்பட்டதாக, நந்தினியே தன்னிடம் கூறியதாகவும், வெண்ணிலா என்ற பெண்ணை கார்த்திக் காதலித்தது நந்தினிக்கு தெரியும் எனவும், அப்பெண் தற்கொலைக்கு நந்தினியும் ஒரு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த வழக்கில் நந்தினிக்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் கார்த்திக் சிறைக்கு சென்றான்.என் மகனை நந்தினி மிரட்டி தான் திருமணம் செய்துக்கொண்டாள். கார்த்திக் கடன் வாங்கியது உண்மை தான், ஆனால் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்தானே தவிர, நந்தினி கூறுவது போல், பல லட்சங்கள் கிடையாது.

    மேலும்ந அவர் கூறுகையில் நந்தினிக்கு நடனம் மிகவும் பிடிக்கும், இதனால் இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டனர்.

    அப்போது எதிர்பார்க்காத விதமாக கார்த்திக்கிற்கு காலில் காயம் ஏற்பட்டது. அதன் பின் நந்தினியின் நடவடிக்கை முற்றிலும் மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.

    இதனை மறுத்த நந்தினி கூறுகையில்,இவை அனைத்தும் பொய் என்றும், வெண்ணிலாவின் தற்கொலைக்கு நான் தான் காரணம் என்றால் போலீசார் ஏன் என் மீது வழக்கு தொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள நந்தினி, அவர்கள் வேண்டுமென்றே தன் மீது குற்றம் சாட்டுகின்றனர் என்று கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்யாணத்திற்கு முன்பே கருக்கலைப்பு :சரவணன் மீனாட்சி நடிகை நந்தினி பற்றிய திடுக்கிடும் தகவல்! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top