728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, April 8, 2017

    தமிழ் மீதுள்ள ஈழத்தமிழர்களின் பற்று..! வைரமுத்து புகழாரம்


    தமிழ்மொழியை பாதுகாப்பதில் ஈழத்தமிழர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ள கவிஞர் வைரமுத்து பி.பி.சிக்கு கருத்து வெளியிட்டார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்.

    ஈழத் தமிழர்கள் தமிழ் மொழியை பாதுகாத்துக் கொள்வதற்காக பாரிய பிரியத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர் எனினும், இந்தியர்கள் தமது தாய்மொழியை பாதுகாக்க தவறி வருகின்றனர்.

    தற்கொலை எண்ணத்தை தடுக்கும் நோக்குடன் எழுதப்பட்ட தனது பாடலுக்கு விருது கிடைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்தியாவிலுள்ள 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலை பொறுத்த வரை தமிழ் மொழியே முன்னிற்கின்றமை பெருமையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தர்மதுரை படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு இந்த விருதுக்கு கவிஞர் வைரமுத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இதே விருதுக்காக ஏழாவது முறையாக வைரமுத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழ் மீதுள்ள ஈழத்தமிழர்களின் பற்று..! வைரமுத்து புகழாரம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top