728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, April 7, 2017

    நேற்றைய போட்டியில் ஹெட்ரிக் சாதனையின் பின் மாலிங்க மைதானத்தில் என்ன செய்தார் தெரியுமா ? இதோ வெளியான வீடியோ


    நேற்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த போட்டியில் , இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஹெட்ரிக் சாதனை புரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இப் போட்டியின் 19 ஓவரை வீசிய மாலிங்க, முஷ்பிகுர் ரஹீம், மொட்டர்ஷா மற்றும் மெஹிதின் ஹசன் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் இச் சாதனையைப் படைத்தார்.

    இந்நிலையில் , குறித்த விக்கட்டுக்களை வீழ்த்தியதை தொடர்ந்து மைதானத்தில் மாலிங்க செய்த செயல் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

    அவர் ரசிகர்களின் பக்கம் திரும்பி அவரின் டீ சர்டில் பொறிக்கப்பட்டுள்ள அவரின் பேரை காண்பித்து மகிழ்ச்சியை வௌிப்படுத்தியிருந்தார்.

    இந்நிலையில் , இந்த டி 20 தொடரின் தொடராட்ட நாயகனாக லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நேற்றைய போட்டியில் ஹெட்ரிக் சாதனையின் பின் மாலிங்க மைதானத்தில் என்ன செய்தார் தெரியுமா ? இதோ வெளியான வீடியோ Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top