சசிகலா 2வது அண்ணன் வினோதகனின் மகன் டி.வி. மகாதேவன் இன்று மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு வயது 47, தஞ்சாவூரில் வசித்து வந்த அவர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கசுவாமி கோயிலுக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்துள்ளது.
தற்போது அவரது உடல் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக பதவி வகித்து பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த தகவல் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து பரோலில் வெளியே வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாராம்.
பரோலில் சசிகலாவை விடுவிப்பது குறித்து சிறை நிர்வாகம் முடிவு செய்யும் என தெரிகிறது.
காலமான மகாதேவனுக்கு இரண்டு மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment